Editorial / 2022 நவம்பர் 07 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களில் 14 பேரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்
14 வயது சிறுவனை சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க மன்னார் நீதவான் இன்று (07) திங்கட்கிழமை மதியம் உத்தரவிட்டார்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் சனிக்கிழமை (05) இரவு 2 படகையும் அதில் இருந்த சிறுவன் உட்பட இந்திய மீனவர்கள் 14 பேரையும் கடற்படையினர் கைது செய்தனர்.
இவர்கள் நேற்று (06) ஞாயிற்றுக்கிழமை காலை தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதன் போது மீனவர்களில் இருவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் தலை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மாலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை(6) மாற்றப்பட்டுள்ளனர்.
ஏனைய 13 இந்திய மீனவர்கள் கடற்படையினரின் விசாரணைகளின் பின் நேற்று (6) ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
-கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் குறித்த மீனவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த 2 மீனவர்களும் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதன் பின்னர் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் சிறுவன் உட்பட 14 இந்திய மீனவர்களையும் இன்று திங்கட்கிழமை (7) மதியம் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.
விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் 14 பேரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு,14 வயது சிறுவனை சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.




19 minute ago
36 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
36 minute ago
45 minute ago
2 hours ago