2025 ஜூலை 14, திங்கட்கிழமை

1500 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2015 ஜனவரி 06 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


சீரற்ற காலநிலை காரணமாக அண்மையில் மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 1500 குடும்பங்களுக்கு, லைக்காவின் ஞானம் அறக்கட்டளை, நிவாரண பொருட்களை திங்கட்கிழமை வழங்கி வைத்தது.

மன்னார் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்;பட்ட தம்பனைக்குளம் மற்றும் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பரிகாரிக்கண்டல், பொன்தீவு கண்டல், அச்சங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 1500 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் கையளிக்கப்பட்டன.

இதன்போது, அரிசி, பருப்பு, சீனி, தேயிலை, பதப்படுத்தப்பட்ட மீன், பால்மா, பிஸ்கட் மற்றும் குழந்தைகளுக்கான பால்மா அடங்கலான உலர் உணவுப் பொதியொன்றும், சவர்க்காரம், பற்பசை, நுளம்புச் சுருள்கள், டெட்டோல், பவுடர், சீப்பு மற்றும் பெண்களுக்கான சானிடரி நாப்கின்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய சுகாதாரப் பொதியொன்றும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், படுக்கை விரிப்புக்கள், துவாய் மற்றும் நுளம்பு வலை ஆகிய அத்தியாவசியப் பொருட்களும் இதன்போது வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மடு பிரதேசச் செயலாளர் சத்திய சோதி ,கிராம அலுவலகர்கள், ஞானம் அறக்கட்டளை நிதியத்தின் மாவட்ட இணைப்பாளர், பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.




 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .