Niroshini / 2021 செப்டெம்பர் 02 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி மாவட்டத்துக்கான கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது தடுப்பூசி, இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்த கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன், தடுப்பூசி கிடைத்ததும் விவரங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், தடுப்பூசி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, தடுப்பூசியை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதென்றார்.
மாவட்டத்துக்கான தடுப்பூசி விரைவில் கிடைக்கப்பெறும் எனவும் எனவே, அப்போது பொதுமக்களுக்கு அறிவித்தல் வழங்குவோம் எனவும் கூறினார்.
அத்துடன், இந்த முறை, இரண்டாவது தடுப்பூசியானது, முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்ட குறிப்பிட்ட நிலையங்களில் செலுத்தப்படாது. பொதுமக்கள் அதிகமான ஒன்றுகூடுவதைத் தவிர்க்கும் வகையில், பிரதேசங்கள் ரீதியாக தடுப்பூசி செலுத்தப்படும் நிலையங்கள் உருவாக்கப்பட்டு, இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago