2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

மக்கள் வங்கி கிளிநொச்சிக் கிளையிலுள்ள அடகு நகைகள் வாடிக்கையாளரிடம் மீளக்கையளிக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 17 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.விவேகராசா)

மக்கள் வங்கியின் கிளிநொச்சிக் கிளையில் வாடிக்கையாளர்களினால் அடகு வைத்த நகைகள் மீளவும் கையளிக்கப்பட்டவுள்ளது.

12 ஆயிரம் வரையிலான அடகு நகைகள் மீளவும் கையளிக்கப்படவுள்ளது என மக்கள் வங்கியின் வன்னி மாவட்ட பொது முகாமையாளர் ரஞ்சித் கொடித்துவக்கு தெரிவித்தார்.

பரந்தன், மாங்குளம், முல்லைத்தீவு  மக்கள் வங்கி கிளைகளில் அடகு வைத்த நகைகள் யாவும் யுத்தகாலத்தில் காணாமல் போயுள்ளது என குறிப்பிட்ட அவர், இவர்களுக்கு தற்போதைய நகைப் பெறுமதியின் பிரகாரம் நட்டஈடு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .