2021 மே 06, வியாழக்கிழமை

வவுனியா நகரசபை வரியிறுப்பாளர் சங்கம் புனரமைப்பு

Menaka Mookandi   / 2011 ஜூன் 19 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

வவுனியா நகரசபை வரியிறுப்பாளர் சங்கம் புனரமைக்கப்பட்டுள்ளது. 1992ஆம் ஆண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு சிறந்த முறையில் செயற்பட்ட போதிலும் பின்னர் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக செயற்படமுடியாது போனது.

இன்று காலை முத்தையா மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சங்கம் புனரமைக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டார்கள். வவுனியா நகரசபைக்கு உடனடியாக தலைவர் நியமிக்கப்பட்டு சபை செயற்பாடுகள் நடைபெற வேண்டும் என புதிய வரியிறுப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நகரசபையின் செயற்பாடுகளுக்கு வலுவூட்டும் கட்டமைப்பாக இந்த சங்கம் செயற்படும் எனவும் இங்கு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிபர், நகர சபை செயலாளர், அரச உயர்மட்ட அதிகாரிகளையும் இந்த சங்க பிரதிநிதிகள் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .