2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

'அரசியல் கலப்பின்றி மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவோம்'

Kogilavani   / 2012 டிசெம்பர் 28 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)

'அரசியல் கலப்பின்றி மக்களின் முன்னேற்றத்திற்காக அனைவரும் பாடுபடவேண்டும். அதுவே மக்களின் அனைத்து வளர்ச்சிக்கும் வழிசமைக்கும்' என வன்னி மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும் பொது செயலாளருமான சி.சிவசோதி தெரிவித்தார்.

வன்னி மக்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு வன்னி மக்கள் முன்னேற்ற கழகமொன்று வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

'ஊருக்கு ஒரு பட்டதாரியை உருவாக்குதல், வளவிலும் வீதியோரங்களிலும் மரங்களை நாட்டல், சிறந்த தலைமைத்துவத்தை இனம் காணல், கல்வி கலாசார விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல், விளையாட்டுதுறை சார்ந்த வீரர்களை தேசிய மட்டத்தில் இனம் காட்டல், விவசாய விலங்கு வேளாண்மையை ஊக்குவிக்க செயற்றிட்டங்களை உருவாக்குதல், ஊழல், சமூகவிரோத செயல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் ஆகியவற்றை இனம் கண்டு உரிய முறையில் அணுகுதல், தேசிய முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தல், பிறப்பு, இறப்பு, பதிவு ஆளடையாள அட்டை, திருமண பதிவு, காணி உறுதிப்பத்திரம், தேர்தல் இடாப்பு பதிவு ஒழுங்குபடுத்த ஆலோசனை கொடுத்தல், ஏனைய மக்கள் சார்ந்த கழகங்கள் நிறுவனங்களுடன் ஒரு பொது உடன்பாட்டில் சேர்த்து கொள்ளல், வேலை வங்கிகளை தோற்றுவித்து பொருளாதார மையம் ஒன்றை உருவாக்குதல் என்ற நோக்கங்களை அடிப்படையாக கொண்டு இவ் அமைப்பினை உருவாக்குகின்றோம்' எனவும் தெரிவித்தார்.

இதன்போது பொதுச்சபை, மத்தியகுழு, நிர்வாக்குழு என்பனவும் தெரிவுசெய்யப்பட்டிருந்தன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X