2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதையடுத்து மூன்று கிராம மக்கள் இடப்பெயர்வு

Kogilavani   / 2012 டிசெம்பர் 28 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

இரணை மடுக்குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதையடுத்து மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்நதுள்ளனர்.

கண்டாவளை, பன்னங்கட்டி, முரசுமோட்டை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களே இவ்வாறு இடம்பெயர்நதுள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிகமாக அருகில் உள்ள பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கண்டாவளையை சேர்ந்த 225 குடும்பங்களும் பன்னங்கட்டியைச் சேர்ந்த 35 குடும்பகளும் முரசுமோட்டையைச் சேர்ந்த 25 குடும்பங்களும் இடம்பெயர்ந்த நிலையில் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் இரணை மடுக்குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேறிவருவதால் குறித்த பகுதியில் உள்ள வீதிகள் யாவும் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X