2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

இடைத்தங்கள் முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 29 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள மீள் எழுச்சித்திட்டம், வடக்கின் துரித மீட்சித்திட்ட கிராம அபிவிருத்தி அமைப்பின் ஊடாக நிவாரணப்பொருட்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.

மன்னார் மாவட்டத்திலும், மற்றும் வடக்கின் ஏனைய மாவட்டங்களான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லத்தீவு மாவட்டங்களிலும் மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட நிவாரணப்பொருட்களின் ஒருதொகுதியே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண மேலதிக திட்டப்பணிப்பாளர், மன்னார் மாவட்ட பிரதி திட்டப்பணிப்பாளர் ஆகியோரால் நானாட்டான் பகுதிகளுக்கு வழங்குவதற்காக நானாட்டான் பிரதேச செயலாளரிடம் நானாட்டான் மகாவித்தியலயத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

அதேபோல் மேலும் ஒரு தொகுதி பொருட்கள் மடு பிரதேசத்திற்கு வழங்குவதற்காக மடு உதவி அரசாங்க அதிபரிடம் சின்னபண்டிவிரிச்சான் பாடசாலையில் வைத்து கையளிக்கப்பட்டது.

மேலும் ஒரு தொகுதி பொருட்கள் நேற்று முசலி பிரதேசத்திற்கு வழங்குவதற்கு போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் மன்னார் இடர்முகாமைத்துவ உதவி பணிப்பாளரிடம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X