2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் வீடுகளுக்கு திரும்புகின்றனர்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 30 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.சுகந்தினி)

கிளிநொச்சி மாவட்டத்தில் மழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட நிலையில் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களில் ஒரு சிலர்; தற்போது தங்களது வீடுகளை நோக்கி திரும்புகி;ன்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த கடும் மழையாலும் குளங்கள் பெருக்கெடுத்ததாலும் 4,015 குடும்பங்களைச் சேர்ந்த 15,374 பேர் பாதிக்கப்பட்டனர். 

கிளிநொச்சி மாவட்டத்தின்  கரைச்சி, கண்டாவளை, பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டனர்.

இவர்களில் 1,584 குடும்பங்களைச் சேர்ந்த 5,730 பேர்  தங்களது வீடுகளை விட்டு வெளியேறிய நிலையில் 26 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டனர். இம்மக்களில் ஒரு சிலரே தற்போது தங்களது வீடுகளுக்கு திரும்புவதாகவும்  கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கு.சுகுணதாஸ் இன்று தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமையும் இன்று ஞாயிற்றுக்கிழமையும் மழை குறைவடைந்துள்ளதுடன், வெள்ளமும் வடிந்தோடிவருவதாகவும் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கூறினார். 

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைமடுக்குளத்தின் நீர் வற்றிவருகின்றது.  இம்மாவட்டத்திலுள்ள ஏனைய குளங்களான அக்கராயன்குளம், கல்மடுக்குளம், பிரமந்தன்குளம், புதுமுறிப்புக்குளம், கனகாம்பிகைக்குளம், வன்னேரிக்குளம், கரியாலை நாகவடுவான்குளம், குடமுறுட்டி குளம் ஆகிய குளங்களிலிருந்து வான் பாய்வதும் குறைவடைந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் எஸ்;.விகிர்தன் தெரிவித்தார்.
 
இரணைமடுப் பகுதியில் 2.2 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் நாகவடுவான்குளம் 0.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ள அதேவேளை, அக்கராயன் பகுதியில் மழை வீழ்ச்சி பதிவாகவில்லையெனவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X