2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

இடைத்தங்கள் முகாம்களாக செயற்பட்ட பாடசாலைகளுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 05 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)

மன்னார் மாவட்டத்தில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்ட வேளை இடைதங்கள் முகாம்களாக செயற்பட்டு வந்த பாடசாலைகளில் 10 பாடசாலைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அமைச்சர் றிசாட் பதியுதீன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் ஆகியோரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட பாடசாலை உபகரணங்கள் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற இந்நிகழ்வில்  அமைச்சர் றிசாட் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல், பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், மன்னார் நகர பிதா எஸ்.ஞானப்பிரகாசம், மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ அமைச்சின் மாவட்ட பணிப்பானர் முஹமட் றியாஸ், அமைச்சரின் இணைப்பாளர்கள் உட்;பட பலர் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X