2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

குழியில் இருந்து தாய், மகனின் சடலங்கள் மீட்பு

Super User   / 2013 ஜனவரி 06 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரத்தினம்)

கிளிநொச்சி குஞ்சிப்பரந்தனில் நீர் நிரம்பியிருந்த குழியில் இருந்து தாய் மற்றும் மகனின் சடலங்களை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கிளிநொச்சி பொலிஸார் மீட்டனர்.

குஞ்சிப்பரந்தனை சேர்ந்த 29 வயதான சுகுமார் நிசாந்தினி மற்றும் அவளது மூன்று வயது மகனான கிருத்திகன் ஆகிய இருவருமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று சனிக்கிழமை மாலையில் இருந்து இருவரையும் காணாத நிலையில் உறவினர்கள் தேடிச்சென்றபோதே வீதி வேலை செய்பவர்களால் தமது தேவைக்காக வெட்டப்பட்ட நீர் நிரம்;பிய குழியில் இருந்து இச்சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி மாவட்ட நீதிபதி விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனையை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X