2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முசலி பிரதேசத்திற்கு அமைச்சர் றிசாத் விஜயம்

Kogilavani   / 2013 ஜனவரி 07 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)

மன்னார் மாவட்டத்தில்; ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையடுத்து பாதிப்புக்குள்ளான பிரதேச மக்களை வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் நேற்று சென்று பார்வையிட்டார்.

கரடிக்குளி, மறிச்சுக்கட்டி, பாலக்குளி, கொண்டச்சி, கொக்குபடையான், தம்பட்டை முதலியார்கட்டு, சிலாவத்துறை, முள்ளிக்குளம், காயாக்குளி, அகத்தி முறிப்பு, பெற்கோணி, கூளாங்குளம் மற்றும் வேப்பங்குளம் ஆகிய கிராமங்களுக்கு அமைச்சர் விஜயம் செய்து பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.

அப்பகுதி மக்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு தேவைகள் குறித்து தமது கவனத்தை செலுத்திய அமைச்சர், உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

இதேவேளை பாதிப்புக்குள்ளான மக்களின் விவசாய சேத விபரங்களை சேகரிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாகவும் தொடர்ந்து வெள்ள அச்சுறுத்தல் ஏற்படும் பிரதேச மக்களின் பாதுகாப்பு குறித்தும் திட்டமொன்றை வகுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

அமைச்சருடன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக், முசலி பிரதே சபை தலைவர் யஹ்யான், பிரதி தலைவர் பைரூஸ் மௌலவி, உறுப்பினர்களான சுபியான், காமில், முசலி பிரதேச செயலளார் கேதீஸ்வரன், வடமாகாண ஆளுநரின் ஆணையாளர் எஸ்.எல்.டீன், மன்னார் நகர சபை உறுப்பினர் நவுசீன், அனர்த்த முகாமைத்துவ மன்னார் மாவட்ட பணிப்பளார் றியாஸ், அமைச்சரின் இணைப்பு செயலாளர்களான அலிகான் ஷரீப், எம்.முனவ்வர் உட்பட பலரும் விஜயம் மேற்கொண்டு இருந்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X