2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

இனவாத, மதவாதக் கலவரத்திற்கு மீண்டும் இடமளியோம்; வவுனியாவில் ஜே.வி.பி. துண்டுப்பிரசுரம்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 10 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம்


அனைத்து மக்கள் மத்தியிலும் ஒற்றுமையை கட்டியெழுப்புவதுடன் இனவாத, மதவாதக் கலவரத்திற்கு மீண்டும் இடமளியோம் எனக் கூறி மக்கள் விடுதலை முன்னணியினர் வவுனியாவில் இன்று வியாழக்கிழமை துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்.

மக்கள் விடுதலை முன்னிணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன்,  அந்தக் கட்சியின் வவுனியா அமைப்பாளர் உட்பட பல ஆதரவாளர்கள் இணைந்து துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்.

இத்துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'எமது பேரன்புக்குரிய தாயகமும் அதில் வாழும் சிங்கள தமிழ், முஸ்லிம், மலே, பர்கர் உள்ளிட்ட அனைவரும் தற்போது பாரிய சமூக பொருளாதார, அரசியல் நெருக்கடியின் பாதக விளைவுகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக வளர்ச்சியடைந்துவரும் இந்த நெருக்கடிகளால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.

ஒருபுறத்தில் விலைவாசி கூடும் நிலையில் சம்பளம் அதிகரிக்கப்படாததன் காரணத்தால் பொதுமக்கள் பொருளாதார  நெருக்கடிக்கும் பல்தேசிய கம்பனிகள் பொருளாதாரத்தை விழுங்குவதால் உள்ளூர் உற்பத்தியாளர்கள் சீரழிந்தும் உள்ளனர்.

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இனவாத பிரிவினைவாத யுத்தத்தால் அழிவடைந்திருக்கும் மக்கள் என்ற வகையில் இனியும் அதேவகையான கலவரங்களுக்கு இடமளிக்காது உணர்ச்சிவசப்படாது புத்தியால் சிந்தித்து மக்கள் முகம் கொடுக்கும் மக்கள் எதிர்நோக்கும் உண்மையான சவால்களை இனங்கண்டு அவற்றை வெற்றி கொள்வதற்காகவும் அதற்காக மக்கள் மத்தியில் ஒற்றுமையை கட்டியெழுப்பவதற்காகவும் உயிரோட்டத்துடன் பங்களிப்புச் செலுத்துமாறும் அனைத்து இன, மத,  மக்களையும் கோருகின்றோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X