2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

தம்பனைக்குளம் கிராம மக்கள் மீண்டும் இடம்பெயர்வு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 11 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜெனி


மல்வத்துஓயா மீண்டும் பெருக்கெடுத்துள்ளதால் மன்னார், மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட தம்பனைக்குளம் கிராம மக்கள் அவசர அவசரமாக பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறியுள்ளனர்.

தம்பனைக்குளம் கிராமத்திலிருந்து நேற்று வியாழக்கிழமை இரவு வெளியேறிய 350 குடும்பங்கள் சின்னப்பண்டிவிருச்சான் ம.வி பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.

மல்வத்துஓயாவின் நீர்மட்டம் 13 அடிக்கு தற்போது காணப்படுகின்றது. மல்வத்துஓயா பெருக்கெடுத்துள்ளதால் முதலில் தம்பனைக்குளம் கிராமமே வெள்ளத்தால் மூழ்குமென்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் வெள்ளநீர் தம்பனைக்குளம் கிராமத்தை இதுவரையில் சூழ்ந்துகொள்ளவில்லையெனவும்
மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கூறினார்.

அண்மையில் பெய்த அடை மழையைத் தொடர்ந்து மல்வத்துஓயா பெருக்கெடுத்ததால் தம்பனைக்குளம் கிராமம் வெள்ளத்தில் மூழ்கியமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X