2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

ரிசானா நபீக்கிற்கு வவுனியாவில் அஞ்சலி பிரார்த்தனை

Kogilavani   / 2013 ஜனவரி 12 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


- நவரத்தினம்


சவுதி அரேபியாவில்  மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கிற்கு நேற்று வெள்ளக்கிழமை வவுனியா, கலைமகள் சனசமுக நிலைய மண்டபத்தில் அஞ்சலி நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கத்தினால் ஏற்பாட்டில் வரியிறுப்பாளர் சங்கத்தலைவர் எஸ். சந்திரகுமார் தலைமையில் இவ் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.

அனைத்து மதத்தவர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் வவுனியா பெரிய பள்ளிவாசல் மௌலவி பிரார்த்தனைகளை மேற்கொண்டதுடன் பலரும் அஞ்சலி உரைகளை நிகழ்த்தியிருந்தனர்.

இதன்போது ரிசானா நபீக்கின் குடும்பத்தினருக்கு பொருளாதார ரீதியில் உதவுவது மற்றும் சவூதி அரசிடமிருந்து உதவித்தொகையை பெற்று அக் குடும்பத்தினருக்கு வழங்க சவுதி தூதரகத்திற்கு மகஜர் கையளிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.


  Comments - 0

  • sivam Saturday, 12 January 2013 08:52 AM

    உங்கள் நினைவு நிகழ்வை வரவேற்கிறோம் அதேவேளை எத்தனை தமிழ் பெண்கள் கொல்லப்பட்டார்கள் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள் சிறையில் தமிழ் ஆண்கள் அடித்து கொல்லப்பட்டார்கள் அப்பொழுது நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்

    Reply : 0       0

    RAJU Tuesday, 15 January 2013 04:18 AM

    நண்பர் சிவம் .அவர்களே செருப்படியான கேள்வி

    Reply : 0       0

    RAJU Tuesday, 15 January 2013 04:21 AM

    நண்பர் சிவம் அவர்களே செருப்பால் அடித்த மாதிரியான கேள்வி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X