2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

முன்னாள் போராளிகளுக்கு சிறப்பான புனர்வாழ்வு: கஜதீர

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 13 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம்


யுத்த நிறைவின்போது 12,000க்கும் அதிகமான தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்த நிலையில், அவர்களுக்கு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் சிறப்பான முறையில் புனர்வாழ்வளித்துள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த புனர்வாழ்வளிக்கப்பட்ட 313 முன்னாள் போராளிகளை உறவினர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் உரையாற்றுகையில், 

'தற்போது பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள்  அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.  இவர்களில் பலரை பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளுக்காக பல நாடுகளுக்கு  அனுப்பியிருக்கின்றோம். தற்போது இவர்களில் சிலர் தேசிய அணிகளிலும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இது மாத்திரமின்றி இவர்கள் புனர்வாழ்வு பெறும்போது தென்மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்று இரு இனங்களுக்கிடையிலும் சகோதரத்துவத்தை வளர்த்திருந்தோம். இவ்வாறாக திறமையான வகையில் புனர்வாழ்வுக் காலத்தை ஒவ்வொருவரும் நிறைவு செய்துள்ளார்கள்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X