2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

குடும்பச் சண்டையில் ஒருவர் பலி; இருவர் காயம்

Kogilavani   / 2013 ஜனவரி 16 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹேமந்த்

கிளிநொச்சி, ஜெயந்தி நகரில் நேற்று செவ்வாய்க்கிழமை இரண்டு குடும்பங்களுக்கிடையே ஏற்பட்ட தகராற்றில் ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவர் அடித்துகொல்லப்பட்டுள்ளதுடன் அதே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் காயமடைந்துள்ளனர். 

இச்சம்பவத்தில் கணபதி செல்வரத்தினம் (வயது 49)  என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். 

மேற்படி நபரின் வீட்டினுள் புகுந்த சிலர்  தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது தலையில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் குறித்த நபர்; கிளிநொச்சி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படடுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் மேற்படி நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X