2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

பெரிய கட்டு புனித அந்தோனியார் ஆலய யாத்திரை ஆரம்பம்

Kogilavani   / 2013 ஜூலை 27 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா பெரியகட்டு புனித அந்தோனியார் ஆலய தல யாத்திரை திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பிரதேச செயலாளர் என்.கமலதாஸ் தெரிவித்தார்.

பெரியகட்டு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இன்று முதல் எதிர்வரும் 4ஆம் திகதி வரை தல யாத்திரை திருவிழா இடம்பெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செட்டிகுளம் பிரதேச செலயகம் மற்றும் தேவாலய நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இம் முறையும் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெரும் எண்ணிக்கையானவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதனால் அவாகளுக்கான குடிநீர் வசதிகள், சுகாதார வசதிகள் மற்றுமு; போக்குவரத்து வசதிகள் அனைத்தும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

அத்தோடு திருவிழாவின் இறுதி மூன்று நாட்களும் விசேட திருப்பலிகள் இடம்பெறவுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .