2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

சிறிதரன் எம்.பி.யின் செயலாளர் விடுதலை

Kanagaraj   / 2013 நவம்பர் 05 , பி.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் பிரத்தியேகச்  செயலாளர் பொன்னம்பலம் லட்சுமிகாந்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர் வேலமாலிகிதன் ஆகிய இருவரும் நேற்று செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்; அறிவகம் அலுவலகத்தில் வைத்தது வெடிமருந்து மற்றும் ஆபாசப்படச் இறுவெட்டு ஆகியவற்றை வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த இருவரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் 11 மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நிரோசா பெர்னான்டோ முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நிரூபிக்கத்தவறிய காரணத்தினால் இவர்களை விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக சிறிதரன் எம்.யிடம் தொடர்பு கொண்டு கேட்டபொழுது, நீதிமன்றத்தின்; உத்தரவினை தாங்கள் மதிப்பதாகப் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X