2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சாவுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 06 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும் இருவரை மன்னார்  போதைப்பொருள் தடுப்புப்பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில் மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இன்று புதன்கிழமை  முற்பகல் மன்னார், சௌத்பார் கடற்கரைப்பகுதிக்குச் சென்று மேற்படி சந்தேக நபர்கள் இருவரையும் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 80 இலட்சம் ரூபா பெறுமதியான 40 கிலோ கிராம் நிறையுடைய  கேரள கஞ்சா  கைப்பற்றப்பட்டுள்ளன. 19 பொதிகளில் அடைக்கப்பட்ட நிலையில் மேற்படி கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். 

மேலும், கஞ்சாவை ஏற்றிச் செல்வதற்காக இருந்த முச்சக்கரவண்டி ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கைதுசெய்யப்பட்ட இருவரிடமும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X