2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலை சுகாதார மேம்பாட்டு முகாமும் கண்காட்சியும்

Kogilavani   / 2013 நவம்பர் 08 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபிலநாத்


வவுனியா சுகாதாரத் திணைக்களமும் கல்வி திணைக்களமும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த பாடசாலை மட்ட சுகாதார கண்காட்சியும் சுகாதார மேம்பாட்டு முகாமும் நேற்று (07)  வவுனியா தவசியாகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பத்து பாடசாலைகளின் பங்கேற்புடன் நடைபெற்றது.

இக் கண்காட்சியில் வவுனியா வடக்கு வலையத்திற்குட்பட்ட பத்து பாடசாலை மாணவர் குழுக்கள் கலந்துகொண்டு தத்தமது  ஆக்கங்களை விளக்கங்களுடன் வெளிப்படுத்தினர். தொடர்ந்து கலை கலாசார நிகழ்வுகளுடன் கண்காட்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளா எம்.மகேந்திரன், மாகாண கல்விப் பணிப்பாளர், வ.செல்வராசா, கேட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.கே.சகாயராஜா உட்பட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், வைத்தியர்கள். தாதியர், பெற்றோர்கள், மாணவர்கள் போன்ற நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X