2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு சுயதொழில் உதவி

Kanagaraj   / 2013 நவம்பர் 09 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாந்தை கிழக்கில் பெண்கள் தலைமை தாங்கும்  33 குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா சுயதொழில் ஊக்குவிப்பு தொகையாக சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக மாந்தை கிழக்கு பிரதேச செயலர் ரி.பிருந்தாபன் இன்று வெள்ளிக்கிழமை (08) தெரிவித்துள்ளார்.

மேற்படி பிரதேசத்திலுள்ள 15 கிராம அலுவலகர் பிரிவுகளிலிருந்து யுத்தத்தினால் கணவனை இழந்த பெண் தலைமைத்துவக் குடும்பங்களில் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 33 குடும்பங்களுக்கு மேற்படி கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

மேற்படி  நிதியினை பயனுள்ளதாக்கும் வகையில் கோழி வளர்ப்பு, மாடு வளர்ப்பு போன்ற சுயதொழில்களில் ஈடுபடுத்துவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X