2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

வடக்கிற்கு விஜயம் செய்த வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் நீண்ட நேரம் தடுத்து வைப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 11 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

பொதுநலவாய மாநாட்டையொட்டி வருகை தந்துள்ள சர்வதேச ஊடகவியலாளர்கள் சிலர் இன்று வடக்கிற்கு விஜயம் செய்ய முற்பட்ட வேளையில் வவுனியாவில் நீண்ட நேரம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

சனல் 4 ஐச்சேர்ந்த ஊடகவியலாளர்கள் வருகை தந்துள்ளனர் என புலனாய்வாளர்களுக்கு தகவல் கிடைத்ததையடுத்து இவர்கள்  தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் இவர்கள் சனல் 4 ஐ சேர்ந்தவர்கள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதன்  பின்னர் வடக்கிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை, வவுனியா கல்குணாமடு பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் காவலரண் பகுதியில் தடுத்து நிறுத்திய பொலிஸார் சுமார் அரைமணி நேரத்தின் பின்னர் வடக்கு நோக்கி செல்ல அனுமதித்தபோதிலும் ஓமந்தை சோதனைச்சாவடியிலும் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து வான் ஒன்றில் வடக்கு நோக்கி பயணித்த சில சர்வதேச ஊடகவியலாளர்கள் மீண்டும் கல்குணாமடு பொலிஸ் காவலரணில் சுமார் 5 மணிநேரம் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்கள் தொடர்பிலான விபரங்களை பெற்றதன் பின்னர் வடக்கு நோக்கி செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X