2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

ஆங்கிலப்பாட ஆசிரியர்களை வடமாகாணசபை கல்வியமைச்சர் சந்தித்தார்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 13 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் ஆங்கிலப்பாட ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறையில் கலந்துகொண்டுள்ள ஆங்கில ஆசிரியர்களை வடமாகாணசபை கல்வி  அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜாவும்  வடமாகாணசபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிராய்வாவும் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நேரில்ச் சென்று கலந்துரையாடினர்.

மன்னார் மாவட்ட மும்மொழிச் சங்கத்தின் அனுசரணையில் நடைபெற்றுவருகின்ற இந்தப் பயிற்சிப்பட்டறையில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 75 ஆங்கிலப்பாட  ஆசிரியர்கள்  கலந்துகொண்டுள்ளனர்.
மேற்படி ஆங்கிலப்பாட ஆசிரியர்களின் மொழித்திறனையும்  கற்பித்தல் திறனையும் மேம்படுத்தும் நோக்கில் இந்தப் பயிற்சிப்பட்டறை நடத்தப்படுகின்றது.

மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள வடமாகாண ஆங்கில உதவி பயிற்சி மையத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை ஆரம்பமாகிய இந்தப் பயிற்சிப்பட்டறை எதிர்வரும் 20ஆம் திகதிவரை நடைபெறும்.

மேற்படி ஆங்கிலப்பாட ஆசிரியர்கள்  எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில்  வடமாகாணசபை  கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜாவும் வடமாகாணசபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிராய்வாவும் கேட்டறிந்துகொண்டனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வன்னியைச் சேர்ந்த  ஆசிரியர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில்   உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இவர்கள் உறுதியளித்தனர்.

இவர்களுடன் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியான், மன்னார் நகர முதல்வர் எஸ்.ஞானப்பிரகாசம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X