2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

சமூக சேவைகள் திணைக்கள பணியாளர்களுக்கான செயலமர்வு

Kogilavani   / 2013 நவம்பர் 13 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி அலுவலர்களுக்கான ஒருநாள் செயலமர்வு செவ்வாய்க்கிழமை (12) கைதடி சாந்தி நிலையத்தில் நடைபெற்றது.

சமூகசேவைகள் திணைக்கள உத்தியோகத்தர் எஸ்.மயூரன் தலைமையில் நடைபெற்ற செயலமர்வில் வடமாகாண பொதுநிர்வாக செயலக அலுவலர் எஸ்.ஈஸ்வரகுமார் வளவாளராகக் கலந்துகொண்டு கருத்துக்களை வழங்கினார்.

இச்செயலமர்வில், அரச உத்தியோகத்தர்கள் ஓய்வுபெறும் போது அவர்களுக்கான ஓய்வூதியங்களைப் பெற்றுக்கொள்வதற்காக பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றிய விடயங்களும், விதவைகள் அநாதைகளுக்கான கொடுப்பனவுகள் பெற்றுக்கொள்ளும் வழிகள் பற்றிய நடைமுறைகள் என்பன பற்றியும் விளக்கமளிக்கப்பட்டன.

இச்செயலமர்வில் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி அலுவலர்கள் உள்ளடங்கலாக 30 பேர் வரையில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X