2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மன்னார் பொதுவைத்தியசாலை தாதிய உத்தியோகஸ்தர்கள் பணிபகிஷ்கரிப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 14 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மேலதிக நேரகொடுப்பணவுகள் வழங்கப்படவில்லை என்று கூறி மன்னார் பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் தாதிய உத்தியோகஸ்தர்கள் இன்று காலை 1 மணித்தியாலம் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை அடிப்படை சம்பளத்திற்கு ஏற்ற அளவிலேயே மேலதிக நேரக்கொடுப்பணவு வழங்கப்பட்டு வந்தது. அதற்கு மேலதிகமாக உள்ள கொடுப்பணவுகள் வெட்டப்பட்டது.

தற்போது மே மாதம் முதல் தற்போது வரை அடிப்படைச் சம்பளம் மாத்திரமே வழங்கப்பட்டு வருகின்றது.

மேலதிகக் கொடுப்பணவுகள் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக நாங்கள் பல முறை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். எனினும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையிலேயே மன்னார் பொதுவைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற தாதிய உத்தியோகஸ்தர்கள் தமது கோரிக்கையினை முன்வைத்து ஒரு மணி நேர அடையாள பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர்.

இருதியாக தமது கோரிக்கை அடங்கிய மகஜரை மன்னார் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரிடம் கையளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வைத்தியசாலையின் பணிகள் வழமைக்குத்திரும்பியமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X