2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத மர ஆலை முற்றுகை

Kogilavani   / 2013 நவம்பர் 15 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரஸ்மின்

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்;பட்ட முள்ளியவளை காட்டுப்பகுதிக்குள் நீண்ட காலமாக சட்டவிரோதமாக இயங்கிவந்ததாக் கூறப்படும் மரஆழை ஒன்றினை முற்றுகையிட்டுள்ளதுடன் சந்தேகத்தின்பேரில் 5பேரை கைதுசெய்துள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கைது நடவடிக்கை நேற்று 14ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே  மேற்படி  மர ஆலை முற்றுகையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக வெட்டப்பட்ட பெறுமதிமிக்க ஒரு தொகுதி முதுரை மரக் குற்றிகள், முதுரை மரப்பலகைகள் என்பனவற்றை கைப்பற்றியுள்ள பொலிஸார் சந்தேகத்தின் பேரில் 5 பேரை கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்று 15ஆம் திகதி நீதிமனறில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X