2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

அரசுக்கு அழுத்தங்கள் கொடுக்க வேண்டும்: பாஸ்கரா

Kogilavani   / 2013 நவம்பர் 18 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


'நாம் எல்லோரும் சேர்ந்து அரசுக்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். இவ்வாறான அழுத்தங்களே எமக்கான விடிவை பெற்றுத்தரும். இந்தியாவில் கூட பிரதமர் பொதுநலவாய மாநாட்டுக்கு வருவோம் வருவோம் என கூறி இறுதியில் வராது விட்டதற்கும் கனேடிய பிரதமர் வராது விட்டமைக்கும் அங்குள்ள எமது உறவுகள் கொடுத்த அழுத்தங்களே காரணமாக உள்ளது' என ஜனநாயக மக்கள் முன்னணியின் பேச்சாளரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான சி. பாஸ்கரா தெரிவித்தார்.

வவுனியா கந்தசாமி கோலில் வீதியில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு மற்றும் காணாமல் போனோரை தேடும் உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்த தீப்பந்த போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் பொதெ அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

'தமிழ் இராச்சியமாக இருந்த எங்கள் பிரதேசத்திதை ஆங்கில அரசுகள் ஒன்றாக்கியதன் பின்னரான காலம் தொட்டு பெரும்பான்மை எனப்படும் சிங்கள அரசுகள் சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்குவதிலேயே உன்னிப்பாக காணப்படுகின்றது.

எம்மை அடக்கி ஒடுக்கியமையினாலேயே அகிம்சை போராட்டங்களும் ஆயுத போராட்டங்களும் தோன்றி இன்றி விரும்பியோ விரும்பாமலோ இழக்கப்பட்ட நிலையில் முள்ளிவாய்க்கல் இழப்புகளை சர்வதேசம் திரும்பிப்பார்க்கும் முக்கிய காலத்தில் நாம் உள்ளோம்.

இலங்கை அரசு தொடர்ந்தும் பேச்சுவார்த்தை என்று சொல்லிச்சொல்லி எம்மை ஏமாற்றுவதிலேயே காலத்தை கடத்துகின்றது.
வட மாகாணசபையை கூட்டமைப்பு 99 வீதத்தால் வெற்றிபெற்று நல்லிணக்கத்தை மேலும் காட்டுவதற்கு பல்வேறு விமர்சனங்களுக்கும் மத்தியில் ஜனாதிபதியின் முன்னால் முதலமைச்சரின் சத்தியப்பிரமாணத்தை செய்திருந்தனர்.

இவ்வாறு பல்வேறு வித்திலும் தமிழர் தரப்பின் நல்லிக்கத்தை இந்த அரசுக்கு காட்டியபோதிலும் மஹிந்த அரசு எவ்வாறு இவற்றையெல்லாம் எட்டி உதைக்கின்றது என்பதனை நாம் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.

ஜனாதிபதியின் முன்னால் சத்தியப்பிரமாணம் செய்து இவர்கள் வட மாகாணத்திற் வருவதற்கு முன்னதாகவே கிளிநொச்சியில் சுன்னக்கல் எடுத்தல் என்ற பெயரில் 1000 ஏக்கர் நிலத்தை சுவீகரித்துக்கொள்கின்றார்கள்.

அதற்கும் மேலாக வலி வடக்கில் உள்ள வீடுகளை இடித்து தள்ளுகின்றார்கள். இவற்றுக்கும் அப்பால் கோமாளி அமைச்சர் மேவின் கோமாளித்தனமான பேச்சை பேசிக்கொண்டிருக்கின்றார்.

இவ்வாறான நிலையில் மக்களின் உரிமைக்காக போராட்டம் நடத்துபவர்களுக்கு கொலை அச்சுறுத்தல்களை விடுக்கின்றார்கள். மாட்டுத்தலையையும் வைக்கின்றார்கள்.

இது மட்டுமல்ல அவுஸ்திரேலிய பிரதமர் பொதுநலவாய மாநாட்டுக்கு வருகை தந்த நிலையில் அந்த நாட்டினதும் நியூசிலாந்தினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்குள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளை சந்தித்தமைக்காக நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் எவ்வாறு நல்லிணக்கத்தை இ;ந்த அரசு ஏற்படுத்தி தரப்போகின்றது.

நாம் எல்லோரும் சேர்ந்து அரசுக்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். இவ்வாறான அழுத்தங்களே எமக்கான விடிவை பெற்றுத்தரும். இந்தியாவில் கூட பிரதமர் பொதுநலவாய மாநாட்டுக்கு வருவோம் வருவோம் என கூறி இறுதியில் வராது விட்டதற்கும் கனேடிய பிரதமர் வராது விட்டமைக்கும் அங்குள்ள எமது உறவுகள் கொடுத்த அழுத்தங்களே காரணமாக உள்ளது.

அவ்வாறான அழுத்தங்கள் எமது ஒற்றுமையின் ஊடாக இங்கும் நடைபெற வேண்டும். அப்போது தான் காணாமல் போன எமது உறவுகளின் நிலையை நாம் அறிந்து கொள்ள முடியும். அவர்களின் நிலையை நாம் சர்வதேச ரீதியில் வெளிப்படுத்த முடியும்' என தெரிவித்தார்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X