2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

'வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதற்கு புதிய மாவட்டம் உருவாக்கப்படுகின்றது'

Kogilavani   / 2013 நவம்பர் 18 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


நவரத்தினம் கபில்நாத்


'வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதற்கு அரசு புதிய மாவட்டம் ஒன்றினை உருவாக்கி வருகின்றது' என வவுனியா மாவட்ட பிரஜைககள் குழுவின் தலைவர் கே.தேவராசா தெரிவித்தார்.

வவுனியா கந்தசாமி கோலில் வீதியில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு மற்றும் காணாமல் போனோரை தேடும் உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்த தீப்பந்த போராட்டத்தில் கலந்துகொண்டு தலைமை உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்.

'வட மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் ஒன்றாக்கி வை;துள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், நாயாறு போன்ற பிரதேசங்களையும் வவுனியா வடக்கு பிரதேசத்தின் தனிக்கல்லு, பட்டிக்குடியிருப்பு, வெடிவைத்தகல், ஊஞ்சல்கட்டி பிரதேசங்களையும் திருகோணமலையில் உள்ள திரியாய், புல்மோட்டை போன்ற பிரதேசத்துடன் பதவியாவில் உள்ள ஒருசில கிராம சேவகர் பிரிவுகளையும் ஒன்றுதிரட்டி வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதற்கு ஏதுவாக வெலிஓயா எனும் மாவட்டத்தை உருவாக்குவதற்கு அரசு கங்கணம் கட்டி நிற்கின்றது.

அது அங்கீகரிக்கப்படாத மாவட்டமாக தற்போதும் இருந்து வருகின்றது. குறிப்பாக பட்டிக்குடியிருப்பு பிரதேசத்தில் 3000 இற்கும் அதிகமான சிங்கள வாக்காளர்கள் இருக்கின்றார்கள். ஆனால் பட்டிக்குடியிருப்பு கிராமசேவகர் அவ்வாறு உள்ளமை தனக்கு தெரியாது என்கின்றார். உண்மையில் அவர்கள் கிராம சேவகரிடம் பதிவு செய்யப்படாமலேயே வாக்காளர்களாக உள்ளனர்.

இவ்வாறு பலவிதமான நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டு வருகின்றது. ஆகவே நில ஆக்கிரமிப்பில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்வும் காணாமல் பேனோரை கண்டு பிடித்து தருமாறும், சிறையில் வாடிக்கொண்டிருப்பவர்களை விடுதலை செய்யுமாறும் இவ்வாறான பிரச்சனைகளுக்கு இறுதியானதும் முடிவானதுமான தீர்வைக்காண்பதற்கும் நாம் ஒற்றுமையாக திரண்டு போராட்டங்களை நடத்த வேண்டும்.

அவ்வாறான போராட்டங்களை மூலமே நாம் அழுத்தங்களை பிரயோகித்து எமது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியவர்களாகியுள்ளோம்' என தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X