2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

வவுனியா மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 18 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பில்  ஆராய்ந்துகொள்வதற்கான கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை  நடைபெற்றது.

வவுனியா முருகனூர் விவசாயப் பண்ணையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின்போது, விவசாயிகள் தாங்கள்  எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளை முன்வைத்தனர்.

இதன்போது விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், மாகாணசபை உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா தெற்கு பிரதேச சபை தலைவர் க.சிவலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X