2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

வவுனியா வடக்கு பிரதேசசபையின் மாநாட்டு மண்டப திறப்பு விழாவும் உள்ளூராட்சி வார நிகழ்வும்

Kogilavani   / 2013 நவம்பர் 19 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா வடக்கு பிரதேச சபையின் மாநாட்டு மண்டப திறப்பு விழா நிகழ்வும் வாசிப்பு மாத நிகழ்வும் நேற்றையதினம் (18) இடம்பெற்றது.

மாநாட்டு மண்டபத்தினை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் நூலகத்தினை வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கமும் நாடாவைவெட்டி திறந்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து வாசிப்பு மாத நிகழ்வுகளும் வவுனியா வடக்கு பிரதேசசபைத் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது நெடுங்கேணி பிரதேசசபைக்குட்பட்ட பாடசாலையில் கல்வி கற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வங்கிக் கணக்குகளும் திறந்து கொடுக்கப்பட்டதுடன் அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா, இ.இந்திரராஜா, வவுனியா தெற்கு பிரதேசசபைத் தலைவர் க.சிவலிங்கம், வடமாகாண போக்குவரத்து அமைச்சரின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் செந்தில்நாதன் மயூரன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப தலைவர் எஸ்.சந்திரகுலசிங்கம், வவுனியா தெற்கு கோட்டகல்வி அதிகாரி எம்.பி.நடராஜா உள்ளிட்ட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X