2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

கொண்ணையன் குடியிருப்புக் கிராம வீடு தீயில் எரிந்து நாசம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 20 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள கொண்ணையன் குடியிருப்புக் கிராமத்திலுள்ள வீடொன்று தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. 

நேற்று செவ்வாய்க்கிழமை  மாலை ஓலையினால் வேயப்பட்ட கூரையைக் கொண்டமைந்த இவ்வீட்டில் தீப்பற்றியதிலேயே வீடு முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இவ்வீட்டுச் சமையலறையிலுள்ள அடுப்பை மூட்டி தண்ணீரைக்  கொதிப்பதற்கு வைத்துவிட்டு, ஆடைகளைக் கழுவுவதற்காக இவ்வீட்டு உரிமையாளரின் மனைவி சென்றுள்ளார்.  இதன்போது அடுப்பு பற்றிய நிலையில் தீ ஓலையில் பிடித்து எரிந்து  வீடு முழுவதும் பரவி எரிந்துள்ளதாக வீட்டு  உரிமையாளர் தெரிவித்தார்.

மேலும், இவ்வீட்டிலும் அருகிலுள்ள எவரும் சம்பவ இடம்பெற்ற வேளையில்  இல்லாமையினால் தீயைக் கட்டுப்படுத்த முடியாது போனதாகவும் அவர் கூறினார். 

இதனால் சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான உடைமைகள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் விரிவான விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X