2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

ஆர்.பி.ஜி ரக குண்டு மீட்பு

Super User   / 2013 நவம்பர் 20 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கனகரட்ணம் கனகராஜ்


வவுனியா, கனகராஜன் குளத்திற்கு அருகிலுள்ள பாலத்தின் கீழிருந்து வெடிக்காத நிலையில் காணப்பட்ட ஆர்.பி.ஜி ரக குண்டொன்று இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதி மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு வந்த கனகராஜன் குளம் பொலிஸார் இந்த குண்டினை மீட்டுள்ளனர்.

மக்கள் அதிக நடமாட்டமுள்ள இந்த இடத்தில் இதுவரை காலமும் இக்குண்டு இருக்கவில்லை எனவும் தற்போது யாராவது கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம் எனவும் அப்பகுதி பொதுமக்கள் பொலிஸாருக்குத தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த பகுதியில் அமைந்திருந்த இராணுவ காவலரண் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X