2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

வயல் காணிகள் மக்களிடம் கையளிப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 20 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ரஸ்மின்

முல்லைத்தீவு, கேப்பாபிலவு சீனியாமோட்டை பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த 17 ஏக்கர் வயல் காணிகளை உரிய மக்களிடம் கையளிக்கும் வைபவம் இன்று 20ஆம் திகதி முல்லைத்தீவு கேப்பாப்பிலவில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் எல்.பி.ஆர்.மார்க், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு உரியவர்களிடம் காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை கையளித்தனர்.

இதேவேளை குறித்த வயல்காணிகள் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், அக்காணியில் நெற்செய்கை செய்வதற்காக விவசாய திணைக்களத்தினூடாக தேவையான நெல் மற்றும் உரவகைகளும் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X