2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மன்னார் மீனவர்கள் நாளை பணிப்பபகிஷ்கரிப்பு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 20 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

உலக மீனவர் தினமான நாளை வியாழக்கிழமை மன்னார் மாவட்ட மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை  முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளை,  பாதிப்புக்களை, துயரங்களை இதுவரையில்  எவரும்  கண்டுகொள்ளாமை, மேற்படி பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமை ஆகியன இதன்போது முன்வைக்கப்படவுள்ளது.  மீனவர்கள்  தங்களது இயலாமையின் வெளிப்பாட்டையும் ஆதங்கத்தையும்  உலக மீனவர் தினத்தை பகிஷ்கரிப்பதன்  மூலம் உலகறியச் செய்யத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மன்னார் மாவட்டத்தில் 40,000 உறவுகளைக் கொண்ட 9,000 குடும்பங்கள் மீன்பிடி மூலமான வாழ்வாதாரத்தை நம்பியவர்களாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

தங்களது உயிரைப் பணயம் வைத்து உலகுக்கு உணவளிக்கும் இந்த மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக அனைவரும் சேர்ந்து தீர்வு காண்பதுடன் அவர்களின் துயர் துடைக்க வழியமைப்போம் எனவும் அவர் கூறினார்.

மீனவர்கள் அனைவரும் இணைந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்றையும் கையளிக்கவுள்ளதாகவும்  அவர்  தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X