2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் விசேட செயலமர்வு

Super User   / 2013 நவம்பர் 20 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஸ்மின்

முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொதுமக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு உரிய தரப்பினர்களிடமிருந்து தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்ட விசேட செயலமர்வொன்று இன்று 20ஆம் திகதி புதன்கிழமை முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் நடைபெற்றது.

ஆசியா அபிவிருத்தி நிறுவனம் மற்றும் முள்ளியவளை பொலிஸ் நிலையம் என்பன இணைந்து இந்த செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது.

முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எம்.சாந்த திலகரட்னவின் தலமையில் இடம்பெற்ற  இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட உதவி பொலீஸ் அத்தியட்சகர் ஜே.சேனாதீர பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள திணைக்களங்களின் பிரதிநிதிகளும் முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், முள்ளியவளைப் பொலிஸ் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது பொதுமக்கள் நாளாந்தம் எதிர்நோக்கிவரும் காணிப் பிரச்சினை, போக்குவரத்து பிரச்சினை, நீர், மின்சாரம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட ஏனைய பிரச்சிகைள் குறித்து வருகை தந்த அதிகாரிகளினால் விளக்கமளிக்கப்பட்டதுடன் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X