2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

யுத்தத்தினால் பெற்றோரை இழந்தவர்களுக்கு உதவி

Super User   / 2013 நவம்பர் 20 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா பெரியமடு பிரதேசத்தில் யுத்தத்தினால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான உதவிகள் இன்று புதன்கிழமை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனினால் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த முப்பது வருட கால யுத்தத்தின் காரணமாக தமது பெற்றோரை இழந்த நிலையில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் நெடுங்கேணி, பெரியமடுவைச் சேர்ந்த 19 மாணவர்களுக்கு 3,000 ரூபாய் மூவாயிரம் வீதம் வங்கியில் வைப்பிலிட்டு வங்கிக் கணக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

நெடுங்கேணி பெரியமடு பிரதேசத்தின் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராஜா, இ.இந்திரராஜா உள்ள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X