2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

அடிப்படை வசதிகளற்ற நிலையில் புதுக்குடியிருப்பு பொதுச்சந்தை

Kogilavani   / 2013 நவம்பர் 21 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

யுத்தம் முடிவடைந்து புதுக்குடியிருப்பு மக்கள் தற்போது மீள்குடியேறியுள்ள நிலையில் அப் பகுதியில் பொதுச் சந்தைக் கட்டிடம் இல்லாமல் சந்தையானது மரநிழலின் கீழ் இயங்குவதாக வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியக் கலாநிதி சி.சிவமோகன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,

'இன்று யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையிலும் புதுக்குடியிருப்பு பிரதேச பொதுச்சந்தைக் கட்டிடமானது அமைத்துக் கொடுக்கப்படவில்லை. இதனால் மரநிழலின் கீழே பொதுச்சந்தையானது இயங்கி வருகின்றது.

மழை காலம் தொடங்கியுள்ளமையால் சதுப்பு நிலத்தில் மரநிழலின் கீழ் இருந்து வியாபரிகளும் மக்களும் சந்தையில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதுடன் தமது பொருட்களை பாதுகாக்க முடியாது சிரமப்பட்டு வருகின்றனர்.

யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் 1996 ஆம் ஆண்டு விமானத் தாக்குதல் காரணமாக முழுமையாக அழிவடைந்த இப் பொதுச் சந்தைக்கட்டினமானது இன்று வரை அமைக்கப்படவில்லை.

முல்லைத்தீவு மாவட்டத்திற்குரிய பிரதேச சபைகளுக்கு கிடைக்கும் வருமானத்தில் இப் பொதுசந்தையூடாகவே அதிக வருமானம் கிடைக்கின்றது.

இதனால் தமது வாழ்வாதாரத்தையும் கவனத்தில் கொண்டு புதுக்குடியிருப்பு பொதுச்சந்தைக்கு நிரந்தர கட்டிடம் ஒன்றினை அமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விட்டுள்ளனர்.

மக்களின் தேவையையும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினையையும் கருத்தில் கொண்டும், 2014 ஆம் வடமாகாணசபை தனது வரவு செலவுத் திட்டத்திலும் இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் எனவும், இது தொடர்பில் மாகாணசபையில் தெரியப்படுத்தவுள்ளது' என அவர்
மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X