2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

ஆசிரிய இடமாற்றங்களில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது: டக்ளஸ்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 21 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -சுமித்தி தங்கராசா

ஆசிரிய இடமாற்றங்கள் அரசியல் தலையீடுகள் இல்லாது இடம்பெற வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்தக் கூட்டத்தில் விவசாயம், மின்சாரம், போக்குவரத்து, பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவுத்திட்டம், வாழ்வின் எழுச்சித் திட்டம், சமுர்த்தி, நகர எழுச்சித் திட்டம், வடக்கின் துரித மீட்சித் திட்டம், சுகாதாரம், உள்ளுராட்சி, நீர்வழங்கல் வடிகாலமைப்பு, சட்டம் ஒழுங்கு அனர்த்த முகாமைத்துவம், கால்நடைகள் அபிவிருத்தி போன்ற துறைகள் சார்ந்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

 கிளிநொச்சியில் வீட்டுத்திட்டம்

2009ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதுவரையில் 22 ஆயிரத்து 818 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 10 ஆயிரத்து 261 வீடுகள் தேவைப்படுவதாகவும் இதற்கு இந்திய வீட்டுத்திட்டத்தின் உதவிகளைப் பெறுவதற்கு உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதாகவும்  அமைச்சர் கூறினார்.

கிளிநொச்சியில் யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் விவசாயபீடம்

பல்கலைக்கழகப் பீடங்களுக்கான சில கட்டிடங்கள் பூர்த்தியாகியிருப்பதாகவும் இவ்வருடத்திற்குள் விவசாயபீடத்திற்கு 100 பேரையும் பொறியியல் பீடத்திற்கு 50 பேரையும் உள்வாங்க இயலுமெனவும்  அமைச்சர் கூறினார்.

இதேவேளை, இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார்,

இந்த இரு பீடங்களுக்கும் மேலதிகமாக விஞ்ஞான தொழில்நுட்பபீடத்தை 2014ஆம் ஆண்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொள்வதாகத் தெரிவித்ததாகக் கூறினார்.

மேற்படி  அபிவிருத்திகுழுக் கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின், வடமாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X