2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் காயமடைந்தவர் மரணம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 21 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சிவகருணாகரன்

வாகன விபத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த  ஒருவர் இன்று வியாழக்கிழமை மரணமடைந்துள்ளார்.

விசுவமடு, தொட்டியடியைச் சேர்ந்த இ.இரத்தினம்  (வயது 51) என்பவரே  இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

பரந்தன் பகுதியில் ஏ - 9 வீதியில் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா பயணித்த வாகனமும்  மேற்படி நபர் பயணித்த  சைக்கிளும் கடந்த 19ஆம் இரவு மோதி விபத்திற்குள்ளானது என பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் மேற்படி நபர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளார்.

மேலும், வாகனத்துடன் சாரதியை கிளிநொச்சி பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X