2025 ஜூலை 24, வியாழக்கிழமை

மரக்குற்றிகளை கடத்திய மூவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 08 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

சட்டவிரோதமாக மரக்குற்றிகளை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் மூவரை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் நாளை வியாழக்கிழமை ஆஜர்படுத்தவுள்ளதாக கிளிநொச்சி மாவட்டத்தின் வனவளத் திணைக்கள அதிகாரி எஸ்.பிரபாகரன் தெரிவித்தார்.

ஸ்கந்தபுரம், முட்கொம்பன் காட்டுப் பகுதியிலிருந்து இன்று புதன்கிழமை சட்டவிரோதமாக 200,000 ரூபா பெறுமதியான முதிரை மற்றும் பாலை மரக்குற்றிக்களை கன்டர் ரக வாகனத்தில் கிளிநொச்சிக்கு கடத்திச் சென்றதாகக் கூறப்படும்  மேற்படி மூவரும் புதுமுறிப்புப் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த வருடம் கிளிநொச்சி மாவட்டத்தில் 30 இற்கும் மேற்பட்ட சட்டவிரோத காட்;டு மரங்கள் கடத்திய சம்பவங்கள் இடம்பெற்றன. குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்;படுத்தப்பட்டு நீதிமன்றத்தினால் தண்டனைகள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .