2025 ஜூலை 24, வியாழக்கிழமை

விசேட தேவையுடையவர்களுக்கு சுய தொழில் பயிற்சிகள் மன்னாரில் ஆரம்பம்

Kanagaraj   / 2014 ஜனவரி 11 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


சமூக சேவைகள் அமைச்சு உலக வங்கியின் நிதியுதவியுடன் 'திரிசெவிய' வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் மாற்றாற்றல் உள்ளோர் புனர்வாழ்வுச்சங்கத்தில் உள்ள மாற்றுத்திரனாளிகளுக்கான ஆறுமாத காலத்திற்கான சுய தொழில் பயிற்சி இன்று சனிக்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மாற்றுத்திரனாளிகளுக்கு அச்சங்கம் தொழில் பயிற்சிகளை நடாத்தி வந்த நிலையில் சமூக சேவைகள் அமைச்சு உலக வங்கியின் நிதி உதவியுடன் 'திரிசெவிய' திட்டத்தின் கீழ் மெழுகு திரி தயாரித்தல் மற்றும் ஊதுவத்தி தயாரித்தல் போன்ற இரு சுய தொழில் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன் போது கௌரவ விருந்தினராக சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் எமில்டா சுகுமார் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக அங்கவீனமுற்றோருக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் சரத் ரவீந்திர,உதவி மாவட்டச் செயலாளர் எம்.பரமதாஸ்,நானாட்டான் பிரதேசச் செயலாளர் சி.ஏ.சந்திரையா,சமூக சேவைகள் அமைச்சின் பணிப்பாளர் எம்.ராமமூர்த்தி,சமூக சேவைகள் அமைச்சின் சமூக சேவை அலுவலகர் பி.கிரிஸ்ணகுமார்,மன்னார் மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி சபையின் முகாமையாளர் ஜே.எம்.ஏ.லெம்பேட் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த இரு தொழிற்பயிற்சிகளையும் ஆரம்பித்து வைத்தனர்.

 ஒவ்வொரு தொழிற்பயிற்சிக்கும் 20 பேர் வீதம் தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதன் போது மன்னார் மாற்றாற்றல் உள்ளோர் புனர்வாழ்வுச்சங்கத்தில் உள்ள மாற்றுத்திரனாளிகள் தயாரித்த சுயதொழில் பொருட்களையும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இதன் போது கருத்துத்தெரிவித்த சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் எமில்டா சுகுமார்,

உலக வங்கியினால் வழங்கப்பட்ட சுமார் 30 இலட்சம் ரூபாய் நிதியுதவியுடன் 9 மாவட்டங்களில் மாற்றுத்திரனாளிகளுக்கான சுய தொழில் பயிற்சியினை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.இதன் அடிப்படையில் முதல் முதலாக மன்னாரில் இந்த சுய தொழில் பயிற்சியினை ஆரம்பிக்கின்றோம்.

இந்த பயிற்சியின் மூலம் விசேட தேவையுடையவர்கள் தன்னம்பிக்கையிடன் தமது எதிர்கால தேவையை பூர்த்தி செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .