2025 ஜூலை 24, வியாழக்கிழமை

ஆனந்தியை கைது செய்வதால் அரசு நெருக்கடிக்கு முகங்கொடுக்கும்: என்.குணசீலன்

Menaka Mookandi   / 2014 ஜனவரி 17 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

'தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை அரசு கைது செய்த புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி புனர்வாழ்வளித்து வருகின்றது. ஆனால் எந்த வகையில் வடமாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரனை கைது செய்து புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்ப முடியும்' என வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஞானசீலன் குணசீலன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (17) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'வடமாகாண சபை உறுப்பினரான ஆனந்தி சசிதரனை கைது செய்து புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பபுவற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக நான் அறிகின்றேன். விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களே இவ்வாறு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்டு வந்தனர்.

ஆனந்தி சசிதரனின் கணவர் ஒரு விடுதலைப்புலி உறுப்பினர் என்பதற்காக இவரை புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்புவதாக இருந்தால் மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் உள்ளடங்களாக தமிழர்கள் அனைவரையும் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்ப வேண்டும்.

அரசு இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் இன்னும் சர்வதேசத்தின் மத்தியில் நெருக்கடியான சூழலே அரசுக்கு உருவாக்கும். மக்களினால் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக வடமாகாண சபைக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாக இதை கருதலாம்.

இவ்வாறான முயற்சிகள் எப்போதும் நல்லிணக்க செயற்பாடாக இருக்க முடியாது' என அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .