2025 ஜூலை 24, வியாழக்கிழமை

முதிரை மரக்குற்றிகளை கடத்திய இருவருக்கு சரீரப்பிணை

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 17 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றிகளை கடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இருவரை தலா 200,000 ரூபா சரீரப்பிணையில் செல்வதற்கு கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் அனுமதியளித்துள்ளார்.

கிளிநொச்சி குமாரசுவாமிபுரத்திலிருந்து சட்டவிரோதமாக தனியார் பஸ் வண்டியொன்றில் முதிரை மரக்குற்றிகளை கடத்திச் சென்றுகொண்டிருந்தாகக்; கூறப்படும் இருவரை முரசுமோட்டைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்ததாக கிளிநொச்சி குற்றத்தடுப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நுகான் திலகரத்தின தெரிவித்தார்.

அத்துடன், இவர்களிடமிருந்து 200,000 ரூபா பெறுமதியான முதிரை மரக்குற்றிகளை  கைப்பற்றியதாகவும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணம் நோக்கி பஸ் வண்டியொன்றில் மரக்குற்றிகள் கடத்தப்படுவதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாகவும் அவர் கூறினார்.  
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .