2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் சுகாதாரத் தேவைக்கான வேலைத்திட்டங்கள்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 29 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வடமாகாண சுகாதார அமைச்சால் 2014ஆம் ஆண்டுக்கு  ஒதுக்கப்பட்ட 18.5 மில்லியன் ரூபா நிதியில் கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதார தேவைக்கான 06 வேலைத்திட்டங்களை  முன்னெடுக்கவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ப.கார்த்திகேயன் தெரிவித்தார்.

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் பராமரிப்பு வேலைகள், வட்டக்கச்சி வைத்தியசாலையின் வைத்தியர் விடுதி அமைத்தல், பளை, பூநகரி வைத்தியசாலை திருத்தங்கள் உட்பட 06  வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்வேலைகளுக்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  விரைவில் இவ்வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X