2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வட மாகாண அமைச்சர்கள் முள்ளிக்குளத்திற்கு விஜயம்

Super User   / 2014 மே 07 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


முள்ளிக்குளம் கிராம மக்களை வடமாகாண அமைச்சர்களான பொ.ஜங்கரநேசன் மற்றும் பா.டெனிஸ்வரன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை (06) நேரில் சென்று சந்தித்துள்ளனர்.

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீண்டும் கடந்த 2010 ஆம் ஆண்டி தமது சொந்த கிராமத்திற்கு திரும்பினர்
இதன்போது, அம்மக்களை கடற்படையினர் மீள்குடியேற அனுமதிக்கவில்லை.

இதனால் முள்ளிக்குளம் கிராமத்துக்கு அண்மித்த மலக்காடு காட்டுப் பிரதேசத்தில் அம்மக்கள் நான்கு வருடங்களாக தற்காலிக கொட்டில்களில் வசித்து வருகின்றனர்.

இம்மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக கடந்த இரண்டாம் திகதி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் விசேட குழுவினர் அங்கு சென்று அம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.

அதன் தொடர்ச்சியாக மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாகவும் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரனின்; அழைப்பிற்கு இணங்கவும் வடக்கு மாகாண விவசாய கால்நடைகள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் செவ்வாய்க்கிழமை (06) முள்ளிக்குளத்துக்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது, அம்மக்களின் மிக முக்கிய தேவையான தற்காலிக கொட்டில்களை புனரமைப்பது தொடர்பாக ஆராயப்பட்டது. அதில் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் அங்கு வசிக்கும் மக்களின் நிலைமை கருதி தற்;காலிக கொட்டில்களை உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி வழங்கியுள்ளார்.

அத்தோடு அம்மக்களின் விவசாய நிலங்கள் கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் அவ்விவசாய நிலங்களை பெற்றுத்தருமாறும், அங்குள்ள குளங்களை புனரமைத்து பயன்பாட்டிற்கு பெற்றுத்தருமாறும், தமது கால்நடைகளை பராமரிக்கக் கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அக்கிராம மக்கள் கோரினர். 

இவ்விடயங்கள் தொடர்பாக முதலமைச்சருடன் கலந்துரையாடி பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் மக்கள் தமக்குள் ஒற்றுமையுடன் செயற்பட்டாலே தமது காணிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X