2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சிக்கு நாமல் விஜயம்

Menaka Mookandi   / 2014 மே 27 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாளைய இளைஞர் அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷ, இன்று செவ்வாய்க்கிழமை (27) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

உயர்தர மாணவர்களுக்கு அரசாங்கத்தால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இணைய கல்வித் திட்டத்தினை கிளிநொச்சி கனிஷ்ட மகா வித்தியாலயத்தில்  அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த 10 பாடசாலைகளின் மாணவர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து கிளிநொச்சி இராணுவ ஒத்துழைப்பு மையத்தில் இலவச கணினி பயிற்சிநெறிகளை மேற்கொள்ளும் முகமாக கணிணிகளையும் வழங்கினார்.

இந்நிகழ்வில், பாடசாலை மாணவர்கள், இராணுவ உயரதிகாரிகள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் என்.கீதாஞ்சலி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X