2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2014 மே 27 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி நகர்ப் பகுதியில் கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரை செவ்வாய்க்கிழமை (27) காலை கைதுசெய்ததாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இவரிடமிருந்து தலா 02 மில்லிகிராம் கஞ்சா அடங்கிய 10 பொட்டலங்களை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

இச்சந்தேக நபர் கஞ்சா வைத்திருப்பதாக பொலிஸாருக்கு  கிடைத்த தகவலைத் தொடர்ந்து  குறித்த இடத்திற்குச் சென்று அவரை
கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இச்சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X