2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மின்னல் தாக்கி சிறுமி மரணம்

Suganthini Ratnam   / 2014 மே 28 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின்  புதுக்குடியிருப்பு, சிவநகர் நகரில் மின்னல் தாக்கத்திற்குள்ளான  தமிழரசன் உதயகுமாரி (வயது 06) என்ற  சிறுமி மரணமடைந்ததுடன், இவரது தாயான தமிழரசன் சுபாஜினி படுகாயமடைந்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் இருந்த இவர்கள் இருவரும்  நேற்று செவ்வாய்க்கிழமை (27) மாலை மின்னல் தாக்கத்திற்குள்ளானதாகவும் பொலிஸார் கூறினர்.

மின்னல் தாக்கத்தில் படுகாயமடைந்த மேற்படி தாய் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X