2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

பெரிய வெங்காயச் செய்கை தொடர்பில் ஆராய்வு

Suganthini Ratnam   / 2014 மே 28 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்டத்தில் பெரிய வெங்காயச் செய்கை  மற்றும்  அதன் சாதகத்தன்மை தொடர்பில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்  ரிசாட் பதியுதீன் தலைமையில் அம்மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (27) மாலை கலந்துரையாடப்பட்டன.

இதன்போது எதிர்வரும் டிசெம்பர்  மற்றும் ஜனவரி மாத காலத்தை அறுவடைக் காலமாகக் கொண்டு, மன்னார் மாவட்டத்தில் பெரிய வெங்காயச் செய்கைக்கான முன்னாயத்தங்கள்  குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது, பெரிய வெங்காய இறக்குமதியை  கட்டுப்படுத்தும்  முகமாக பெரிய வெங்காயச் செய்கையை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்திவருவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்  ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டையில் பரீட்சார்த்தமாக முன்னெடுக்கப்பட்ட பெரிய வெங்காயச் செய்கை சாத்தியப்பாட்டை எட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஹம்பாந்தோட்டையை ஒத்த காலநிலை மன்னார் மாவட்டத்திலும் நிலவுவதால், பெரிய வெங்காயச் செய்கை சாத்தியப்படலாமென்று எதிர்வுகூறப்படுவதாக மன்னார் மாவட்ட விவசாயத் திணைக்கள அதிகாரிகள் கூறினர்.  

இக்கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மெல், வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், விவசாய போதனாசிரியர்கள், விவசாயத் திணைக்கள அதிகாரிகள்,  பெரிய வெங்காயச் செய்கையாளர்கள்; உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X